சிறுகண்பீளை
வேறுபெயர்கள்:
- சிறுகண்பீளை
- கண் பீளை
- கற்பேதி
- பெரும்பீளை
தாவரப்பெயர் : AERVALANATA
குடும்பம் : AMARANTACEAE
சிறுகண் பீளை வேர்ப்பட்டையையும், பனைவெல்லத்தையும் சம அளவாக எடுத்து நன்கு அரைத்து இருநூறு மி.லி.பசும் பாலுடன் கலந்து தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் நீரடைப்பு, கல்லடைப்பு, முதலிய நோய்கள்குணமாகும்.
கல்லடைப்பு, சிறுநீரக கல், நீர்த்தாரை எரிச்சல்
- சிறுகண்பீளை செடியை சமூலமாக (செடியின் அனைத்து பாகமும்) எடுத்து நீர் விட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து வடிகட்டி குடித்துவர சிறுநீரகம் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.
- சிறுகண்பீளை இலை 44 கிராம் எடுத்து வெண்ணெய் போல நன்கு அரைத்து நீர் கலக்காத எருமை: மோரில் கலந்து குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும்.
- சிறுகண்பீளை, நெருஞ்சில் வேர், சீதேவி செங்கழுநீர், மாவிலங்கப்பட்டை இவற்றை சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீர்விட்டு நன்கு காய்ச்சி எட்டில் ஒரு பங்காய் வற்றியதும் வடிகட்டிக் கொள்ளவும். இதை காலை, மாலை இருவேளை குடித்து வர கல்லடைப்பு குணமாகும்.
Emoticon Emoticon