சித்தரத்தை
சித்தரத்தை
- கிழங்கு வகையை சார்ந்தது.
- கோழை, கபத்தை அகற்றும்.
- உடல் வெப்பத்தை அகற்றும்.
- பசியை தூண்டும்.
- நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.
- வலியை நீக்கும்தன்மையும் உண்டு.
- மூட்டுகளில் ஏற்படும் இறுக்கத்தை சீராக்கும்.
- தசை பிடிப்பை நீக்கும்.
இருமல் ஏற்படும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்க வேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இருமல் நின்றுவிடும்.
உடல்சூடு காரணமாக தோன்றும் இருமல்க்கு சித்தரத்தையுடன், சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து சுவைக்கவேண்டும்.
சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால், வாய் நாற்றம் நீங்கும். ஈறுகளில் உள்ள நோய்த் தொற்றும் சீராகும்.
வாகனங்களில் பயணம் செய்யும்போது, வாந்தி தொந்தரவு இருப்பவர்கள் பயணம் செய்யும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு சுவைத்துக்கொண்டிருந்தால் வாந்தி வராது. வயிற்றை புரட்டுவது போன்ற அவஸ்தைகளும் ஏற்படாது.
வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு 10 கிராம் சித்தரத்தையை நன்கு இடித்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகவேண்டும்.
மூட்டு வலி, வீக்கம் இருப்பவர்கள் சித்தரத்தையை இடித்து, கஞ்சியில் கலந்து சாப்பிடவேண்டும்.