சீயக்காய்
சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும்.
சீகைக்காய் கொண்டு முடியை அலசி வந்தால் கூந்தல் அடர்த்தியையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. சீயக்காய் பயன்படுத்துவதால் தலைச்சருமத்தை வறட்சியாக்காது. வாசனையாக இருக்கும்.
கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கி அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி கூந்தலை மிருதுவாக்குகிறது. சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
வீட்டிலேயே சீயக்காய்(shikakai) தூள் அரைக்க தேவையான பொருட்கள் :
- சீயக்காய் - 1 கிலோ,
- வெந்தயம் - 100 கிராம்,
- பூலாங்கிழங்கு – 100 கிராம்,
- செம்பருத்திப்பூ- 50 பூ,
- எலுமிச்சை தோல் - 25,
- காய்ந்த நெல்லி - 100 கிராம்,
- பயத்தம் பருப்பு - 1/4 கிலோ,
- கார்போக அரிசி - 100 கிராம்,
- செம்பருத்தி பூ, இலை - 50 கிராம்,
- பூவந்திக் கொட்டை - 100 கிராம்,
- மரிக்கொழுந்து - 100 கிராம்.
- ஆவாரம்பூ - 100 கிராம்,
- அனைத்து பொருட்களையும் வெயிலில் 2 நாட்கள் வைத்து காய வேண்டும்.
- நன்றாக காய்ந்த பின் மிஷினில் கொடுத்து அரைக்க வேண்டும்.
- தலையில் எண்ணெய் தடவி வேண்டும்.
- 10 நிமிடம் கழித்து சீயக்காய் குழைத்து பூச வேண்டும்.
- 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
- அலசினால் கூந்தல் மிருதுவாக இருக்கும்.