முடக்கத்தான்
- முடக்கத்தான், வாதநாராயணன் இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு பல் பூண்டு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்..
- முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை, பரட்டைக் கீரை மூன்றையும் சம அளவு எடுத்துச் சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தைலமாக்கித் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குறையும்.
முடக்கத்தான் கீரை
முடக்கதான் கீரையை பயன்படுத்தி வந்தால்
- நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலிமை பெறும்.
- இடுப்பு வலி,கழுத்து வலி, மூட்டு வலி சரி செய்கிறது
- வாயு தொல்லையை நீக்கி, மலசிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.
- கண் சம்மந்தமான பிரச்சனையை சரிசெய்ய கூடியது.
- முடக்கு வாத சம்மந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
- குடலிறக்க நோய்களையும் சரிசெய்கிறது.
- மாதவிடாய் பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
- முடக்கத்தான் கீரையை அரைத்து சாறு எடுத்து , காது வலி இருந்தால் காதில் 2 சொட்டு ஊற்ற காதுவலி குணமடையும்.
- முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, நெல்லிக்காய் அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து உண்டுவர குடலிறக்க நோய் குணமாகும்.
- முடக்கத்தான் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் உண்டுவர சொறி, சிரங்கு, கரப்பான், போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
- முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் புற்று நோயின் தாக்கம் குறையும்.
- முடக்கத்தான் கீரையை அரைத்து விதைகளின் மிது பற்று போட விதை வீக்கம் குணமாகும்.
Emoticon Emoticon