அமுக்குரான்
அமுக்கிரா கிழங்கு இது வடமொழியில் அஸ்வகந்தா என அழைக்கப்படும்.
- அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம். அமுக்கராக்கிழங்குப் பொடியைச் சாப்பிட்டு வந்தால் `மெலிந்த உடல் பருக்கும், பருத்த உடல் இளைக்கும்'
- அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம்.
- அமுக்கரா வேர், தூதுவேளை சமுலம், இரண்டையும் சம எடை எடுத்துப் பொடி செய்து அரை முதல் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது காய்ச்சின பசும்பாலில் கலந்து சாப்பிட்டுவர, நாட்பட்ட சளிக்கட்டு நீங்கி, உடல் வலிமை அடையும்.
- அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும்.
- கிழங்கை பாலில் வேக வைத்து அலம்பி உலர்த்தி பின் பொடி செய்து, ஒரு வேளைக்கு 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும்.
- அமுக்கிரா கிழங்கு பொடி - 1 பங்கு, கற்கண்டு - 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் பசுவின்பாலுடன் (½ - 1 ஆழாக்கு) 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.
- அமுக்கராக்கிழங்கு சேர்த்துச் செய்யக்கூடிய `அமுக்கரா லேகியம்' அல்லது `அசுவகந்தி இளகம்', எல்லாச் சித்த மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். இதை உட்கொண்டால் வெள்ளைப்படுதல், மேகச்சூடு, மேக ஊறல், உடல் மெலிதல் ஆகியவை நீங்கும்
Emoticon Emoticon