Sakthivel Kumarasamy
11:06
குப்பைமேனி
மருத்துவ குணங்கள்:
- நெஞ்சுக்கோழையை நீக்கும்.
- இருமலைக்கட்டுப் படுத்தும்.
- விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
- குப்பைமேனி இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
- குப்பைமேனி இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும்.
- குப்பைமேனி இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
- வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும். குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
Sakthivel Kumarasamy
17:35
மஞ்சள்
- ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசைபோல அரைத்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வீக்கம் கரையும்.
- 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை படுக்கும் முன்பு இறுகக் கட்டி விட செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
- கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
- குப்பைமேனி இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
- மஞ்சள் மற்றும் கடலைமாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவைத் தரும்.