யமதீபம்
தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது வழக்கத்தில் உள்ளது.
யம தீபம் ஏற்றினால்...
குடும்பம் விருத்தியாகும்.
தொழில் முன்னேறும்.
திருமணத் தடைகள் விலகும்,
சொத்துகள் சேரும்.
அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.
மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.
அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே.
அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.
இந்த வருடம் சனிக்கிழமை திரயோதசி திதி ஆரம்பிக்கிறது.ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமே முடிந்து விடுவதால் சனிக்கிழமை ஏற்ற வேண்டும்.
விளக்கு தானாக அணைய வேண்டும்.
அணைந்த விளக்கை வீட்டிற்குள் கொண்டு வரக் கூடாது.
கால் படாத இடத்தில் போடணும்