தும்பை
தும்பை ரசம்:
தேவையான பொருட்கள்:
- தும்பை இலை,
- தும்பை பூ,
- நல்லெண்ணெய்,
- வரமிளகாய்,
- பூண்டு,
- கடுகு,
- மிளகுப்பொடி,
- சீரகப்பொடி,
- கறிவேப்பிலை,
- கொத்தமல்லி,
- புளிகரைசல்,
- மஞ்சள் பொடி,
- பெருங்காயப்பொடி,
- உப்பு.
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.
- இதில் கடுகு போட்டு பொறிந்ததும் வரமிளகாய், பூண்டு (பற்கள் தட்டி) போடவும்.
- தும்பை செடியின் இலை, பூக்களை போட்டு வதக்கவும்.
- இதன் பின்னர் புளிகரைசல் சேர்க்கவும்.
- நீர்விட்டு மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்கவும்.
இந்த ரசத்தை குடித்து வர நெஞ்சக கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.
- தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.
- தும்பைச் செடியைஅரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவரத் தேமல் குணமாகும்.
Emoticon Emoticon