வாதநாராயணன்
வேறு பெயர்கள்:
வாதரக்காட்சி
ஆதிநாராயணன்
வாதரசு
தழுதாழை
வாதமடக்கு
- வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, 3 பல் பூண்டு, திப்பிலியுடன் (சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்துச் சாப்பிட்டால் முடக்குவாதம் குறையும்.
- வாதநாராயணன், முடக்கத்தான், இரண்டையும் சம அளவு எடுத்து, ஒரு பல் பூண்டு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
- வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை, பரட்டைக் கீரை மூன்றையும் சம அளவு எடுத்துச் சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சித் தைலமாக்கித் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குறையும்.
- வாதநாராயணன் இலையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்
- வாதநாராயணன் இலையைப் பிழிந்து சாறு எடுத்து, சுக்கு, மிளகு, திப்பிலி, வெள்ளைக் கடுகு ஆகியவைகளை ஒன்றாகக் கலந்து காய்ச்சி அருந்தினால் கீல் வாதம், முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், ஜன்னி, மேகநோய் யாவும் போய்விடும்
- வாதநாராயணன் பூக்களைப் பறித்து, காய வைத்துப் பொடியாக்கி, சூரணம் செய்து சாப்பிட்டாலும் பக்கவாத நோய் குணமாகும்.