குரு பெயர்ச்சி 2016
வாக்கிய பஞ்சாங்கப்படி : இந்த துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18ம் தேதி 2.8.16 செவ்வாய்க்கிழமை காலை மணி 9.23க்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். 1.9.17 வரை கன்னி ராசியில் குரு பகவான் அமர்ந்து சஞ்சாரம் செய்கிறார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி : இந்த துர்முகி ஆண்டு ஆடி மாதம் 27ம் நாள், 11.8.2016 வியாழன் அன்று இரவு 9:28 மணிக்கு சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். 10.9.17 வரை கன்னி ராசியில் குரு பகவான் அமர்ந்து சஞ்சாரம் செய்கிறார்.
சில ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களும், சிலருக்கு லேசான பாதிப்பும் ஏற்படும்.
பணம், குழந்தை செல்வம் இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவின் பார்வை சக்தி வாய்ந்தது. குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. வியாழ நோக்கம் வரும் போது திருமணம் முடிக்கலாம்.
மகர ராசி, மீன ராசி, ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆனி போய் ஆடி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சிம்மம், விருச்சிகம், ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.