முசுமுசுக்கை
முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும்.
அறிவியல் பெயர்: Mukia maderaspatana
இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.
- முசுமுசுக்கையை புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உளுந்து, தேங்காய் சேர்த்து துவையல் செய்து சாப்பிடலாம்.
- நெய்யில் வதக்கி குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம்.
- தோசைக்கு ஊறவைக்கும் அரிசியுடன் முசுமுசுக்கை இலையை ஊறவைத்து அரைத்தோ, தனியாக முசுமுசுக்கை இலையை அரைத்து தோசை மாவுடன் கலந்தோ தோசை சுட்டு சாப்பிடலாம்.
இப்படி சாப்பிடுவதால் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை பெறலாம்.
- முசுமுசுக்கை இலை சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் சைனஸ் பிரச்னை சரியாகும்.
- முசுமுசுக்கை இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால்... எலும்புருக்கி நோய், காசநோய் போன்றவற்றை குணமாக்கும். முக்கியமாக நுரையீரல் புற்றுநோயை சரிபண்ணும்.