துத்திக் கீரை
- துத்திக்கீரை அல்லது வட்டத்துத்தி புதர் கையைச் சார்ந்த செடி ஆகும்.
- துத்தி விதை மூலம் இனப்பெருக்கம் அடைகின்றது.
- துத்திக்கீரையில் இலை, வேர், பட்டை, பூ ஆகியவை பயன் தரும் பகுதிகள் ஆகும்.
துத்தி இலை
- அழற்சியைப் போக்கும்
- மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும்.
- நோய் நீக்கி உடலைத் தேற்றும்;
- கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்;
- சிறுநீரைப் பெருக்கும்.
துத்தி பூ
- இரத்தப் போக்கை அடக்கும்.
- காமம் பெருக்கும்.
- இருமலைக்குறைக்கும்.
- ஆண்மையைப் பெருக்கும்.
- குளிர்ச்சி உண்டாக்கும்.
துத்தி விதை
- இனிப்புச் சுவையுடையது.
- சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்ற வற்றைக் குணமாக்கும்.
மருத்துவ பயன்கள்
- துத்தி செடி வேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களின் மீது தடவினால் முகப்பருக்கள் நீங்கி விடும்.
- துத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் மிதமான பதத்தில் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணிந்து, தாது விருத்தி ஏற்படும். விந்து உற்பத்தி அடர்த்தியாகும்
- துத்தி விதைகளை பொடி செய்து 10 கிராம் அளவில் எடுத்து கொண்டு, 120 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை நீங்கும்.
- துத்தி இலைகளை இடித்துச் சாறு தயாரித்து அதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.
- துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.
- துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.
- துத்தி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் இதர நோய்கள் தீரும்.
- துத்தி இலைகளையும், துத்திப் பூக்களையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து வலி ஏற்படும் இடங்கள், வீக்கம் மற்றும் புண்களின் மீது பற்று போல் போட்டால் வலி குறையும். புண்கள் மற்றும் வீக்கங்கள் விரைவில் நீங்கும்.