இஞ்சி
- துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
- காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
- இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
- காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு அதிகரிக்கும்.
- இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட, மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி நீங்கும்
- சிறிது இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
- இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும். அதுவும் இதை காலையில் குடித்தால் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.
- மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, செரிமானம் கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
வாந்தி (Vomitting)
உங்களுக்கு ட்ராவல் செய்யும்போது வாந்தி வரும் பிரச்சனை உள்ளதா?அப்போ இஞ்சி ஒரு இன்ஸ்டன்ட் நிவாரணி! மேலும் இது கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி உபாதைகளை தடுக்கவும், அஜீரண கோளாறுகளைச் சரி செய்வதிலும் இஞ்சிற்கு மிஞ்சி எதுவும் இல்லை! மேலும் இஞ்சியில் பயோ ஆக்ட்டிவ் காம்போண்டுகள் அதிகம் உள்ளதால் நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ, மருந்துகளை உட்கொள்ளுபவராக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது.
வாயு தொல்லை (Constipation)
வாயு தொல்லை, உப்பிய வயிறு, மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து நிவாரம் பெற சோடா போன்றவற்றை குடிக்காதீர்கள் மாறாக ஒரு கப் தண்ணீரில் இஞ்சியை போட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை குடிப்பதனால் வயிற்று பிரச்சனைகள் நீங்கும், இஞ்சி டீ-யும் ஒரு சிறந்த நிவாரணி!இனிமே சோடா, குளிர்பானங்களை தவிர்த்து இஞ்சி சேர்த்த பானங்களை பருகுங்கள்.
சளி- (Cough)
இஞ்சி இன்ஃபெக்சன் ஆகாமல் தடுக்கும் குணம் கொண்டது. உங்களுக்கு சளி பிடிப்பது போல் உணர்ந்தால் முதலில் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்… இஞ்சி ஜூஸ் ஒரு சிறந்த மருந்து இது சளியை உருவாக்கும் வைரஸ்களை எதிர்த்து செயல்பட்டு சளியை குணமாக்கும்.ஒரு ஆய்வில் ஃபிரெஷ் இஞ்சியில் சுவாசக்கோளாறுகளை குணமாகும் சக்தி உள்ளது என தெரியவந்திருக்கிறது. காய்ந்த இஞ்சியை விட பிரெஷ் இஞ்சியில் அதிக குணநலன்கள் உள்ளன. இனிமே இஞ்சி வாங்கும் பொது இஞ்சி ஃபிரெஷா இருக்கானு பார்த்து வாங்குங்க.
மாதவிடாய்-(Peroids)
மாதவிடாய் காலத்தில் அதிக வலியால் துடிக்கிறீர்களா? மாத்திரைகளை இனி பயன்படுத்த வேண்டாம்! இஞ்சி ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் ஆரம்பிக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு 4 முறை இஞ்சி தூள் மாத்திரைகளை 3 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இனி மாதவிடாய் காலத்தில் வலி வராது. மேலும், இஞ்சியை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்த நீரை தேன் அல்லது எலுமிச்சையுடன் குடிக்கலாம்.
வலி-(Pain)
இஞ்சியில் ஜின்ஜரோல் எனப்படும் ஆண்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இது வீக்கத்தை குறைக்கும் நலன் கொண்டுள்ளது. மேலும், தசை பிடிப்பு போன்றவற்றிக்கு இஞ்சி மிகவும் நல்லது இது நல்ல தீர்வினை தரும்.இஞ்சி சாறினை வலி உள்ள இடங்களில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
புற்றுநோய்- (Cancer)
இஞ்சி புற்று நோயை அழிக்கும் திறன் கொண்டது. ‘கோலோரெக்டல் புற்றுநோய்’ பாதிக்க அதிக வாய்ப்புள்ளவர்கள் இப்போதே இஞ்சினை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.
உடல் எடை- (Weight loss)
உடல் பருமனாக இருக்கிறதென்று கவலை படுகிறீர்களா? இஞ்சி இருக்க இனி நீங்கள் ஜிம் போக வேண்டியதில்லை ! இஞ்சியை தினமும் சாப்பிட உங்களுக்கு ஏற்படும் அதிக பசி குறையும். உடல் எடையை நீங்கள் இஞ்சினை வைத்து சரிசெய்து கொள்ளலாம்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.