வருகிறது லை-பை : வைபை விட 100 மடங்கு..
- லை-பை என்பது எல் இ டி. விளக்கொளியிளிருந்து இன்டர்நெட் பெறும் வசதி.
- இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி தேவையே இல்லை.
- வீட்டில் உள்ள எல்.இ.டி. பல்பு எரிந்தால் போதும், அதன் மூலமே இன்டர்நெட் வசதியை பெறலாம்.
- இந்த தொழில்நுட்பத்திற்கு லைபை (li-fi) என பெயரிட்டுள்ளனர்.
- எல் இ டி. வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டு இன்டர்நெட் உயிர்பெறுகிறது.
- அத்துடன் இது ‘வைபை’-ஐக் காட்டிலும் 100 மடங்கு விரைவானது.
- வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது.
- ஆனால் ‘லை-பை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுவதில்லை. எனவே ஆகாய விமானங்களிலும் இதன் மூலம் இன்டர்நெட் வசதியை பெறலாம்.
- இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வகையான சாதனங்களிலும் இன்டர்நெட் வசதியை பெறலாம்.
- உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை
பிடித்திருந்தால் SHARE செய்யவும்
Emoticon Emoticon