நாயுருவி
வேறு பெயர்கள்
- காஞ்சரி.
- கதிரி,மாமுநி.
- நாய்குருவி.
- அபாமார்க்கம்
வேறு மொழிப்பெயர்கள்
உட்டாரெனி(Uttareni) :Telugu
உட்டரனீ(Uttaranee) : Kannadam
கடலாட்(Kadalad) :Malayalam
சிர்-சிர்(Chir-Chir) : Hindi
அபமர்க(Apamarga) : Sankrit
ரப்சாப்(அ)ப்ரிகிலி ரப்சாப்(Rough Chaff or Prickly Chaff) : Englsih
- பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும்.
- நாயுருவிச்செடியின் இலைகளை சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.
- இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து சமைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர நுரையீரல் பற்றிய சளி, இருமல் குணமாகும்.
- இதன் இலையுடன் சம அளவில் துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு இருவேளை கொடுக்க வண்டு, பிற பூச்சிக்கடி குணமாகும்.
- நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.
- துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.
- நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும்.
நாயுருவி வேர்
- கருப்பையைச் சுருக்கும்.
- வாந்தியை உண்டாக்கும்.
- கருவைக் கலைக்கும்.
- முக வசீகரத்தை அதிகமாக்கும்.
நாயுருவி அரிசி:நாயுருவி செடிகளில் உள்ள கதிர்களில் உள்ளவையே நாயுருவி அரிசி எனப்படுகின்றன. இவற்றை சேகரித்து, அரிசி போல சமைத்து சாப்பிட்டு வர, நாட்கள் ஓடினாலும் பசி எடுக்காது, உடலும் தெம்பாக இருக்கும் என்கிறது சித்த மருத்துவம். மீண்டும் பசியெடுக்க, மிளகு சீரகம் வறுத்து, நீரில் கொதிக்கவைத்து பருகிவரலாம்
Emoticon Emoticon