கீழாநெல்லி
கீழாநெல்லி ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடு உடையதாகும்
பெயர்கள்:
- அவகதவாய்,
- இளஞ்சியம்,
- கீழ்க்காய்,
- காதமாதாநிதி,
- கீழ்வாய் நெல்லி,
- காமாலை நிவர்த்தி...
- மாலறுது,
- வித்துவேசரம்,
- மாலினி,
- பெருவிரியகா,
- பூதாத்திரி
தமிழர் மருத்துவத்தில், மஞ்சள் காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர்.
வழுக்கையில் முடி வளர
வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்...
கீழாநெல்லி தைலம்.
நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு, கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்கு 9 கிராம் பசும்பால் விட்டு அரைத்து கலக்கிக் காய்ச்சி வடித்தால் இது கீழாநெல்லி தைலமாகும். இதனால் தலை முழுகி வந்தால் உச்சி குளிர்ந்து டென்ஷன் குறையும். அது மட்டும் அல்ல முடி நன்றாக வளரும்.
மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி நோய்களுக்காக பயன்படுகின்றது.
- மூத்திர நோய்கள்,
- மஞ்சள் காமாலை,
- குடல்புண்
- தொண்டை நோய்கள்,
- வயிற்றுவலி,
- வயிற்றோட்டம்,
- அதிக உஷ்ணம்,
- கண்நோய்கள்,
- மாதவிடாய்க் கோளாறுகள்,
- பசியின்மை,
- முறைசுரம்,
- தோல் நோய்கள்,
- தீராத அழுகல்
- புண்கள்,
- குருதிவடிதல்,
- புரைகள்,
- வீக்கம்,
கீழாநெல்லியின் மருத்துவப் பயன்கள்:
- கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.
- கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.
- சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
- கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.
- கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும்.
- கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால் அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
- ஓரிதழ் தாமரையுடன் சம அளவாக கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வாலிப வயோதிகம் நீங்கும்.
- கீழாநெல்லிப் பொடி மஞ்சள் காமாலை, உடலில் உண்டாகும் வெப்பம், உடலில் ஊறிய மேகம், தாதுவெப்பம், நீரிழிவு இவற்றை போக்க உதவும்.
- பல் கூச்சம் இருந்தால் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் போதும். உடனே பல் கூச்சம் போய்விடும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால். ஈறு நோய்கள் குணமாகும்
- கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.