திருநீற்றுப் பச்சிலை
வேறு பெயர்கள்
- உருத்திரச்சடை,
- பச்சை சப்ஜா,
- திருநீற்றுப்பச்சை,
- விபூதிபச்சிலை,
- பச்சபத்திரி,
- திருநீத்துப்பத்திரி
தாவரவியல் பெயர் : ஆஸிமம் பேசிலிகம் (Ocimum basilicum) -
லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது
சப்ஜா பானம்
இனிப்புச் சுவையுடைய இதன் விதைகள், ‘சப்ஜா’ விதைகள் என்று பரவலாக அழைக்கப்படுகின்றன. இதன் விதைகளைச் சுமார் இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து சுவைமிக்க மருத்துவ பானத்தைத் தயாரிக்கலாம்.
வயிற்று வலி, கண் எரிச்சல், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்போது, பனங்கற்கண்டு சேர்த்து சப்ஜா பானத்தைப் பருக, சுவையோடு விரைந்த நிவாரணமும் கிடைக்கும். மலத்தை வெளித்தள்ளும் செய்கை இந்தப் பானத்தின் ‘அசையும் சொத்து!’
- இலைகளைப் பிரயத்தனப்பட்டு அரைக்க அவசியமில்லை. லேசாகக் கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி மறையும்.
- திருநீற்றுப் பச்சிலை இலைச் சாற்றுடன் வசம்பைச் சேர்த்தரைத்து, முகப்பருக்களின் மீது தடவி வர, பவுர்ணமி சந்திரனாய் முகம் பிரகாசிக்கும்.
- இதன் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
- இலையை கசக்கி, சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். சாதாரண பருக்கள் மட்டுமல்ல.. புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும். அதேபோல கண்கட்டி உள்ளிட்ட சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதன் சாறு அருமையான நிவாரணி.
ஆண்டி ஆக்ஸிடெண்ட்
பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது.
Emoticon Emoticon