அசோகப்பட்டை
- கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.
- அசோக மரப்பட்டையுடன், உப்பு சேர்த்துப் பொடியாக்கி அதில் பல் துலக்கி வந்தால் பல் ஈறுகள் வலுப்படும். அனைத்து பல் நோய்களும் குணமாகும்.
- அசோக மரப்பட்டை, மருதம் மரப்பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடியாக்கித் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய், இதய நோய்கள் குணமாகும்.
- அசோக மரப்பட்டை (அரை கிலோ), சீரகம் (50) இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.
- அசோக மரப்பட்டையைப் (5 கிராம்) அளவுக்கு பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் கர்ப்பபை கோளாறுகள் தீரும்.
- அசோக மரப் பூக்களை உலர்த்திப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
- அசோக மரப் பட்டையை (3 கிராம்) தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்குக் குடித்துவந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நிற்கும்