மாதுளம்
- கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.
- மாதுளை பழத் தோலை நன்றாக உலர்த்தி பொடியாக்கி அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து எடுத்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் ஈறுகள் வலுவாகும். பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். பல் வலி போன்ற பிரச்சனைகள் தீரும்.
- மலத்துடன் ரத்தம் வெளியேறுகிறது என்றால் 50 மில்லி மாதுளை பழச் சாறு எடுத்துக் கொண்டால் இதிலுள்ள துவர்ப்பு சக்தி இப்பிரச்சினையை கட்டுப்படுத்தி தீர்வு கொடுக்கும்.
- மாதுளைப்பழத்தில் உள்ள கால்சியம் சத்து இதயத்தின் தசைப் பகுதிகள் வலுவுடன் செயல்படுவதற்கு உதவுகிறது.
- குடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை சுத்தப்படுத்தி குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
- தூங்கும் முன்பு மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால், அதிலுள்ள இரும்பு சத்தினை உடல் உடனடியாக உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் சி உதவுவதால் நரம்பு மண்டலம் அமைதியாகி ஆரோக்கியமான தூக்கத்தை தருகிறது.
Emoticon Emoticon