காராமணி - தட்டைப்பயறு
இது வறண்ட நிலங்களிலும் செழித்து வளர்ந்து ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் ஏழைகளின் அமிர்தம் காராமணி என்று அழைக்கப்படுகிறது. பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், விட்டமின் கே, விட்டமின் சி மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள் :
- ஜீரண சக்தி அதிகரிக்கும் : காராமணியானது நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ளது. எனவே ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கிறது.
- நச்சுகளை நீக்கும் : காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இவை ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன. இதனால் செல்களின் பாதிப்படைவது தடுக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் ‘விட்டமின் சி’ உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- நல்ல தூக்கத்தை கொடுக்கும் : காராமணியில் மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் என்னும் சத்து உள்ளது. இது உடலின் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகை செய்கிறது. தூக்க வராமல் தவிப்பவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு காராமணியை சாப்பிட்டுவிட்டு படுத்தால் நல்ல தூக்கத்தினைப் பெறலாம்.
- இதயத்தை பாதுகாக்கும் : காராமணியில் காணப்படும் விட்டமின் பி1 (தயாமின்) இதய நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விட்டமின் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் காராமணியில் காணப்படும் பிளவனாய்டுகள் இதயம் நன்றாகச் செயல்பட உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடைசெய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- எலும்புகளின் பாதுகாப்பில் : காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.
- உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
- வயிற்றுப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உண்டு.
- வளரும் குழந்தைகளுக்கு மிகவு உகந்தது.
- உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காராமணியை காலை மற்றும் மதியம் எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் 1/2 கப் அளவு காரமணியில் 1 கிராம் கொழுப்பு உள்ளது.
- காராமணியில் உள்ள துத்தநாக உப்பு, லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்’ என்ற சமிக்ஞையைத் தந்துவிடும்.
- இதில் நிறைந்துள்ள விட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.
- Anti-oxidants அதிகமாக நிறைந்துள்ளதால் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்துவிடும்.
- சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம்.
- அதிக அளவு காராமணியை உட்கொள்ளும்போது அது வாயுவைப் பெருக்கும். இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.
- flavonoids நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கும்.
- பக்கவாதம்(stroke), உயர் இரத்த அழுத்தம் (hypertension), ஆஸ்டியோபோரோசிஸ்(osteoporosis) போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும்.
- முகச்சுருங்களை போக்கி தோல்களை மென்மையாக வைத்திருக்க உதவும், மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
- நார்ச்சத்து இருப்பதால், இது இருதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது.