அவுரி - நீலி
தும்பை இலை, அவுரி இலை, மிளகு ஆகியவற்றைச்சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, உடல் முழுவதும் பூசிவர எந்தக் கடிவிசமும் மாறும்.
அவுரியிலை, அவுரிவேர் பட்டை, பொறித்த பெருங்காயம், மிளகு இலைச்சாறு சம எடை தூக்கி நன்றாய் அரைத்து சுண்டாக் காய் அளவு மாத்திரை செய்து நாள் ஒன்றுக்கு காலை ஒன்று மாலை ஒன்றாகக் கொடுத்து உப்பில்லாப் பத்தியம் வைக்க நரம்புச் சிலந்தி குணமாகும். மூன்று முதல் ஐந்து நாள் வரை கொடுக்கலாம். இதையே ஈரமாய் இருக்கையில் நரம்புச் சிலந்தி தோன்றிய இடத்தில் வைத்துக் கட்டலாம்.
பல்லில் உள்ள கிருமிக்கு, நீலியின் வேரைக் கடித்துத் துப்ப தீரும்.
தீயால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க, அவுரி பயன்படும்.
அவுரி, மஞ்சள் கரிசாலை, வெள்ளைக் கரிசாலை, குப்பைமேனி, கொட்டைக்கரந்தை, செருப்படை ஆகியவற்றின் இலைகளை சம அளவாகச் சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து, காலை, மாலை வேளை, 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும். வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளும் விலகும்.
அவுரியின் இலை மற்றும்காய்கள் மலச்சிக்களல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது. இலைகளிலும் காய்களிலும் ‘சென்னோஸைடு’ மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. மூலம் மற்றும் மலச்சிக்கல் நோய்களைக் குணப்படுத்த இவை பயன்படுகின்றன. உலகளவில் அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
Emoticon Emoticon