கருவேலம்
- இலைகள், பட்டை, பிசின் மற்றும் கனிகள் இலைச்சாறு வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு மருந்தாகிறது.
- இதன் கசாயம் புற்றுநோய் மற்றும் தொண்டைக் கம்மல், பல்வலி போக்கும். பட்டையை உலர்த்திப் பல்தேய்த்து வந்தால் பல் ஆடுதல், பல் ஈறில் இரத்தம் வருதல் போன்றவை நலமாகும்.
- பல் உறுதிப்படும்.
- கருவேலங்கோந்து உடல் உறுதி பெறவும் இரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது.
- பூ மொட்டுகளைத் தொகுத்து உலர்த்திப் பொடி செய்து சர்க்கரையும் கலந்து தர இருமல் குணமாகும்.
கருவேலன் பட்டையைத் துண்டுகளாக நறுக்கி வெய்யிலில் காயவைத்து 30 கிராம் கிராம்பு 6 கிராம் மென்தால் சேர்த்து உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை மாலை பல் துலக்கிவர பல்வலி குணமாகும்.
கருவேலன் பட்டைகளை உடைத்து போட்டுக் கஷாயம் வைத்து வாய்க் கொப்பளித்து வந்தால், வாய் ரணம், ஈறுகளின் வீக்கம் என அனைத்தும் எளிதில் குணம் அடைந்து விடும்.
கருவேலன் பட்டையைத் தூள் செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி தீப்புண்களுக்குப் போட்டு வர சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.
கருவேலன் பிசினுடன் கடுக்காய்த் தோல் சேர்த்து இடித்து, சல்லடையில் சலித்து அரை தேக்கரண்டி அளவு தேனுடன் தினமும் இருவேளை சாப்பிட தாது கெட்டிப்பட்டுவிடும்.
கருவேலன் பிசினை துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட் கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தி அடையும்.
Emoticon Emoticon