வேம்பு அல்லது வேப்பை
வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை.
பல்வேறு தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு இயற்கை தீர்வாக உள்ளது. முடி, தோல் பிரச்சனைகளுக்காக உள்ள பல மருத்துகளில் வேம்பு தான் முக்கியமான மூலப்பொருள் ஆகும்.
- நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுபடுத்த கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்று ஆயுர்வேத மருத்துர்கள் நம்புகின்றனர். இது நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் கொரோனோ நோய்த்தொற்றிலிருந்து விரைவாக மீளவும், வராமல் தடுக்கவும் கண்டிப்பாக உதவும்.
- தோலில் வேப்ப எண்ணெயைப் தேய்ப்பதால் கொசுகடியிலிருந்து தப்பிக்கலாம் அதுமட்டுமல்லாமல் வீடுகளில் வேப்ப இலைகளை எரித்தால் கொசுக்கள் ஓடிவிடும்.
- வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவதால் ஈறு பிரச்சனைகள் , பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் என எல்லாம் சரியாகும்.
- வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட டீ குடித்தால் சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Emoticon Emoticon