துளசி
துளசி ஒரு மூலிகை செடியாகும்.
(Ocimum tenuiflorum)
இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது.
வேறு பெயர்கள்
ஸ்ரீதுளசி
ராமதுளசி
துழாய் (நீல நிற துளசி)
துளவம்
மாலலங்கல்
ராமதுளசி
துழாய் (நீல நிற துளசி)
துளவம்
மாலலங்கல்
திவ்யா
பிரியா
விஷ்ணுபிரியா
பிருந்தா
கிருஷ்ணதுளசி
தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.
துளசி இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தை குறைக்கும்.
துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ பிரச்சனைகள் அகலும்.
துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் சளி, இருமல் பறந்தோடிவிடும்.
நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
5 துளசி இலைகளை காலையில் தண்ணீரில் தவறாமல் விழுங்கினால் பல வகையான தொற்று நோய்கள் மற்றும் மூளை பலவீனத்தை போக்கும்.
துளசிக்கு இத்தனை மகிமையா?
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும்
ஆன்மிக மகத்துவம்
சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.
துளசி தளத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூஜிப்பவருக்கு மறுபிறவி கிடையாது. துளசியை பூஜை செய்ததின் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று துளசி ராமாயணம் கூறுகிறது.
துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்
இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கமும் உண்டு.
Emoticon Emoticon