மிளகு
- ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.
- ஓமம்,மிளகு,வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை,மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு, வேளைக்கு 1/2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிக்கழிச்சல் ஆகியவை தீரும்.
- அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும். இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை குணமாக்குகிறது.
Emoticon Emoticon