ஆடாதோடை
வேறு பெயர்கள்:
ஆடாதோடை
ஆடாதொடை
வாசை
ஆடாதொடை
வாசை
ஆடாதோடை ஒரு புதர்ச் செடியாகும்.
இதன் இலைகள் மிகவும் கசப்புத்தன்மை கொண்டவை. எனவே, ஆடு மாடுகள் இதனை உண்ணாது. ஆடு தொடாத இலை என்பதனால் ஆடு தொடா இலை என்பது மருவி ஆடாதோடை இலை என்று ஆயிற்று.
"ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்" எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது.
ஆடாதோடை மூலிகையின் அரிய பயன்கள்!!
- ஆடாதோடை குடிநீர் தயாரித்து அருந்தி வர தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கி விடும்
- ஆடாதோடை இலைகளை பொடியாக்கி, நீரில் கலந்து பருகிவர, சளித்தொல்லைகள் காரணமான தசை வலிகள் யாவும் விலகிவிடும்.
- ஆடாதோடை இலைகளை நன்கு அலசி, நீரில் காய்ச்சி,மூன்றில் ஒரு பங்காக நீர் சுடும்வரை வைத்திருந்து, பின்னர் தேனுடன் கலந்து பருகிவர, ஜுரம், சளி, இருமல், உடல்வலி மற்றும் ஆஸ்துமா பாதிப்புகளை நீக்கும்.
- முறையாக நாற்பத்தெட்டு நாட்கள் பருகிவர, கொடிய பாதிப்புகள் தரும் T.B என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அந்த காச வியாதி-எலும்புருக்கி வியாதி விலகிவிடும்.
- ஆடாதோடை இலைச்சாற்றை தேனுடன் கலந்து பருகிவர,இரத்த கொதிப்பு, மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் விலகிவிடும்.
- ஆடாதோடை இலைகளை காயவைத்து சுருட்டி, புகைத்துவர, சுவாச இரைப்பு வியாதிகள் விலகும். அல்லது ஆடாதோடை இலைபொடியை, ஊமத்தை இலையில் இட்டு சுருட்டி புகை பிடித்துவர, மூச்சுத்திணறல் பாதிப்புகள் அகலும்.
Emoticon Emoticon