கண்டங்கத்திரி
கண்டங்கத்திரியின் இலை, பூ, காய், பழம், பட்டை, வேர், விதை வரை அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு முன்பு செடியை முழுவதையும் வேரோடு எடுத்து முதலில் முள் நீக்க வேண்டும். பிறகு அதை உலர்த்தி தூள் செய்துகொள்ள வேண்டும்.
- சளி, சுவாச நோய்கள் வரும் போது ஒரு டீஸ்பூன் அளவு கண்டங்கத்திரி தூளை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வேகமாக குறையும்.
- ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் கண்டங்கத்திரி தூளை உள்ளுக்கு எடுத்துவந்தால் பலன் கிடைக்கும்.
- கண்டங்கத்திரி இலைகளை பொடியாக்கி நல்லெண்ணெய்யில் குழைத்து மார்பில் தடவினால் வாத நோய் குணமாகும்.
- உடலில் பலவிதமான நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
- சைனஸ்பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கண்டங்கத்திரி பழத்தை நறுக்கி, துளசி இலை, கருப்பு வெற்றிலை போன்றவற்றை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி அந்த எண்ணெயை கொண்டு தலையில் தேய்த்துவந்தால் சைனஸ் குறையும்.
- பழங்களை பறித்து வெயிலில் உலர்த்தி வற்றலாக்கி மருந்து குழம்பில் பயன்படுத்தும் போது, கண்டங்கத்திரி பழம் நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நுரையீரல் புற்று செல்களுக்கு எதிராக வீரியமாக செயல்படகூடியது. வயிறு மற்றும் குடல் சார்ந்த இயக்கங்கள் அனைத்திலும் கிருமித்தொற்று ஏற்படாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
- வளரும் குழந்தை இளைப்பு, இருமல் பிரச்சனைக்கு உட்பட்டால் இந்த பழத்தை உலர்த்தி அதன் பொடியை தேனில் கலந்து காலை, இரவு இரண்டு வேளையும் கொடுக்கலாம் இதனால் நாட்பட்ட இளைப்பு பிரச்சனை குறையும்.
- பசியின்மை பிரச்சனையால் அவதிப்படும் போது இந்த கண்டங்கத்திரி பழ வற்றலை பொடியாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவ வேண்டும். மூன்று நாள்கள் தொடர்ந்து செய்து வந்தாலே சாப்பிட தொடங்குவார்கள்.
- காய்ச்சல் காலங்களில் கண்டங்கத்திரி வேருடன் சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவிட்டு சுண்டக்காய்ச்சி அந்த நீரை வெந்நீருக்கு மாற்றாக குடித்துவந்தால் கபத்தால் உண்டான நோய் விரைவில் குணமாகும்.
- உடலில் வெண்புள்ளி, வெண் குஷ்டம் என்று சொல்லகூடிய பிரச்சனைக்கு கண்டங்கத்திரி இலையை நல்லென்ணெய் சேர்த்து காய்ச்சி தடவி வந்தால் அவை மறைய கூடும். கண்டங்கத்திரி பழத்தை மண் சட்டியில் வேகவைத்து, அவை வெந்ததும் நல்லெண்னெய் சேர்த்து குழைத்து மெழுகு பதம் வரும்போது இறக்கி ஆறியதும் வடிகட்டி வைக்கவும் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் பலன் கூடுதலாக கிடைக்கும். அதே போன்று பாத வெடிப்புக்கும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
கண்டங்கத்திரி நோய் எதிர்ப்பு சக்தி அதிக கொண்டதால் சாப்பிட்டதும் தொண்டையில் தொடங்கி வயிறு முழுவதும் மருத்துவ சிகிச்சை வேலைகளை துவங்கிவிடுமாம். எனவேதான் தொண்டையில் துவங்கும் கொரோனாவையும் அங்கிருந்தே அழிக்கும் என்கின்றார் இயற்கை மருத்துவர். எனினும், இது தொடர்பாக நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் எதுவும் இல்லை.
Emoticon Emoticon