பிரண்டை
வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு.
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும்.
பிரண்டை
- குடல்புழுக்களை அழிக்கிறது,
- பசியைத் தூண்டுகிறது.
- வயிற்று உபாதைகளுக்கு எதிராக செயல்படுகிறது.
- தோல் நோய்கள், தொழுநோய், இரத்தப்போக்கு, கால் கை வலிப்பு, வலிப்பு நோய், நாள்பட்ட புண்கள், வீக்கம். ஆகியவற்றிற்கும் அருமருந்து.
- உடல் எடை வயிற்றைக் குறைக்க உதவுகிறது.
பிரண்டைத் துவையல்
பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை.
- பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.
- பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.
- அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.
- மாதவிடாய் நின்றதும் பெண்கள் எலும்புகள் அரித்து துளைகளாக மாறி எலும்பு எளிதில் முறிந்து விடும். பிரண்டையை பயன்படுத்தினால் எலும்புகள் வலுவாகும்
-
- பிரண்டைச்சாறு பல் ஈறுகளில் இரத்தம் கசியும் ஸ்கர்வி நோயை குணப்படுத்துகிறது. பிரண்டைச்சாறு ஆஸ்மாவுக்கு மருந்தாக பயன்படுகிறது
- கால்நடைகளுக்கு தீவனத்துடன் பிரண்டையை தருவதால் பால் சுரப்பு அதிகமாகிறது
-
Emoticon Emoticon