ஆவாரம் பூ
சர்க்கரை நோயா? ஆவாரை சாப்பிடுங்க!
- ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவக் குணங்களை கொண்டவை. சில தாவரங்களின் பூக்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றன. “ஆவாரம் பூ” அப்படிபட்ட மருத்துவ குணம் நிறைந்த ஒரு பூ வகை ஆகும். “ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” எனும் பழமொழி ஆவாரம் பூவின் மருத்துவ குண மகிமையை கூறுகிறது.
- நீரிழிவுக்கு சித்தமருத்துவத்தில் மருந்தாக தருவது ஆவாரை தான். இதை நவீன ஆய்வுகளும் ஒப்புகொண்டு. ஆவாரையில் ஆன்டிகிளைசெமிக் இருப்பதை உறுதி செய்துள்ளன
- ஆவாரை பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து கொண்டு வைத்துகொள்ளவேண்டும். இதை மாதவிடாய்க்கு முன்பு 15 நாட்களில் ஒரு டம்ளர் பாலோடு கால் டீஸ்பூன் கலந்து கொடுத்தால் அதிக இரத்த போக்கு குறையும்.
- மாதவிடாய் நாட்களில் தினமும் இரவு நேரத்தில் ஆவாரை இலையை எடுத்து வயிற்றில் கட்டிகொண்டால் வயிறு வலி நிச்சயம் குறையும்.
- ஆவாரை பூ, இலை, வேர், பட்டை, பிசின் அனைத்தையும் ஒன்றாக்கி அதனுடன் நாவல் பட்டை, கொன்றைபட்டை, மருதம், கோஷ்டம் கொண்டு தயாரிக்கப்படும் ஆவாரை நீர் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதோடு நீரிழிவால் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துகிறது.
- கைப்பிடி அளவு ஆவாரம் பூவை எடுத்து இரண்டு டம்ளர் நீரிலிட்டு கொதிக்க வைத்து இனிப்புக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். வாரத்துக்கு மூன்று நாள் இதை குடித்துவந்தால் சிறுநீர்கடுப்பும் எரிச்சலும் விரைவில் மறையும்.
- ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும். அதோடு சொறி, அரிப்பு போன்றவற்றையும் நீக்கும்.
- ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.
- ஆவாரம் பூக்களை நன்கு அரைத்து, அதன் சாற்றின் சில துளிகளை அவ்வப்போது கண்களில் விட்டு வந்தால் கண்ணில் இருக்கும் கிருமிகள் அழிந்து, மெட்ராஸ் ஐ எனப்படும் கண் சம்பந்தமான வியாதி மறையும், கண்கள் மீண்டும் பழைய நிலையை விரைவில் அடையும்.
ஆவாரம் பூ தேநீர்
ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார்.
- ஆவாரம் பூ தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
- ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும்.
- ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும்.
Emoticon Emoticon