வசம்பு
- திருநீற்றுப் பச்சிலை இலைச் சாற்றுடன் வசம்பைச் சேர்த்தரைத்து, முகப்பருக்களின் மீது தடவி வர, பவுர்ணமி சந்திரனாய் முகம் பிரகாசிக்கும்.
- காய்ந்த வசம்பை பொடி பண்ணி அதிலிருந்து 1/2 ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து கொதிக்கவிட்டு, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் பசியின்மையோ, சிறு சிறு தொற்று நோய்களோ வராது. 6 மாதத்திற்குட்பட்ட வயதுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு சிட்டிகை வசம்பு பொடி போதுமானது.
- தொற்று நோய் அண்டாமல் இருக்க வசம்பை சிறிய மணி அளவில் பொடிதாக நறுக்கி நூலில் கோர்த்து (தேவைப்பட்டால் அழகுக்கு இடையிடையே கறுப்பு, வெள்ளை மணிகள் கோர்த்து) பிள்ளையின் கைகளில் வளையமாக கட்டிவைப்பார்கள்.
- வசம்பை தூள் செய்து 2 ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது ஜீரணம் கொடுக்கக் கூடியதாகவும் பலவித தொற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்தாகவும் அமையும்.
- வயிற்றுவலியால் தொடர்ந்து கஷ்டப்படும் குழந்தைகளுக்கு வசம்பை தீயில் சுட்டு மருந்து உரைக்கும் கல்லில் வைத்து தேய்த்து பவுடராக்கி, 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் குழைத்து, குழந்தையின் தொப்புளை சுற்றி பற்று போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
- விஷத்தன்மை கலந்துவிட்ட உணவை யாரும் சாப்பிட்டுவிட்டாலோ அல்லது விஷத்தையே சாப்பிட்டிருந்தாலும் 2 அல்லது 3 டீஸ்பூன் பொடியாக்கிய வசம்பை தண்ணீரில் கரைத்து உடனே கொடுத்தால் விஷம் வெளியே வந்துவிடும் என்று சொல்வார்கள்.
- கால்நடைகளுக்கு தொற்றுநோய் வராமல் தடுக்க வசம்பு தூளுடன் மஞ்சள்தூள் கலந்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.
- மூட்டுவலிகள் இருப்பவர்கள் வசம்பை நீரில் தேய்த்து மூட்டுபகுதிகளில் தடவி வர வலி குறையும். வாதம், கீல்வாதம் போன்றவற்றையும் தீர்க் கும் வசம்பு. விஷ பூச்சிகள் கடித்த இடத்தில் வசம்பு பொடியை நீரில் குழைத்து வைத்தால் விஷங்கள் இறங்கும்.
- இது பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.
Emoticon Emoticon