நிலவேம்பு
நிலவேம்பு
சித்தரத்தை
சித்தரத்தை
- கிழங்கு வகையை சார்ந்தது.
- கோழை, கபத்தை அகற்றும்.
- உடல் வெப்பத்தை அகற்றும்.
- பசியை தூண்டும்.
- நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.
- வலியை நீக்கும்தன்மையும் உண்டு.
- மூட்டுகளில் ஏற்படும் இறுக்கத்தை சீராக்கும்.
- தசை பிடிப்பை நீக்கும்.
முடவாட்டுக்கால்
முடவாட்டுக்கால்
- ஆகாயராஜன்
- முடவாட்டு தேக்கு
- முடவாட்டு கிழங்கு
- ஆட்டுக்கால் கிழங்கு.
- வாதவள்ளி கிழங்கு
- பாறைகளில் விளையும் இவற்றிற்கு வேர்கள் கிடையாது
- பாறைகளில் உள்ள உலோக சத்துக்களலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்னை இந்த முடவாட்டு கால் கிழங்கிற்கு உண்டு
- இவற்றில் இருந்து தங்கத்தை(அயனியை)பிரிக்க இயலும்.
- மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும்
- மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து.
- குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறைக்கு இது மிகச்சிறந்த Food supplements....
- இந்த கிழங்கு சாப்பிடும் காலங்களில் கோபமோ மனசஞ்சலமோ வரவே வராது
- ஆரோகியமான குழந்தை பெற இந்த கிழங்குகளை மூன்று மாதம் தொடந்து எடுத்துகொண்ட பின்பு குழந்தை பேருக்காக முயற்சி செய்யுங்கள் நல்ல சிறப்பான பலன் கிடைக்கும்
- இவற்றில் உள்ள தாது உப்புகள் சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு கால்சியம் விந்துவை அடர்த்தியாக மாற்றும்
- சிறு வயது குழந்தைகளுக்கு வரும் வாதநோய் களுக்கு முடவாட்டுக் கால் கிழங்கை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து இளம் சூட்டில் உடலில் ஊற்றி தினம் குளித்து வர இரண்டு,மூன்று மாதத்தில் வாத நோய்கள் குணமாகும்.
- மூட்டுவாதம் வந்து முடங்கிப் போனவர்களுக்கு இக் கிழங்கு மூலமாக லேகியமாக மருந்து அல்லது கசாயம் [ சூப் ] செய்து கொடுத்தால் மூட்டுவலி, முடக்கு வாதம் நீங்கி குணமடைவார்கள்.
- இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கசகசா, தேங்காய் துருவல் ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
- முடவாட்டுக்கால் கிழங்கு 250 கிராம் வாங்கி, நன்கு கழுவி, சுத்தம் செய்து, மேற்தோலிலுள்ள ரோமங்களையும், புறணியையும் நீக்கி, இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, அத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து, லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும். முடவாட்டுக்கால், அரைத்த மசாலா, வதக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை 1 லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும்.
- குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.
குப்பைமேனி
குப்பைமேனி
- நெஞ்சுக்கோழையை நீக்கும்.
- இருமலைக்கட்டுப் படுத்தும்.
- விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
- குப்பைமேனி இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
- குப்பைமேனி இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும்.
- குப்பைமேனி இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
- வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும். குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக்காய்
சுண்டைக்காய்
- ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
- இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது.
- காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
- வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
- நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது.
- பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
- பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
- தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
பப்பாளி
பப்பாளி
பப்பாளியில் உள்ள முக்கியமான நன்மைகளை காணலாம்..
- பப்பாளி பழம் சாப்பிட்டால் முகம் பொலிவு அடையும்.
- உடலில் உள்ள கொழுப்பை குறைத்தல்.
- உடல் எடை குறைத்தல்.
- தேவை இல்லாத கொழுப்புகளை குறைத்தல்.
- நீரிழிவு நோயை தடுக்கும் சக்தி.
- இதில் உள்ள பாப்பேன் என்ற சத்து இரத்த ஓட்டத்தை எளிமைப்படுத்தி பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயால் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கும்.
சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை
- சோற்றுக் கற்றாழை சாரையோ, அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காம்ல் இருக்கும்.
- சோற்றுக்கற்றாழையின் சதையை நன்கு அறைத்து ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு தேக்கரண்டி பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனைக்கலந்து முகத்தில் பூசவும். இது முகத்தின் சூட்டை தனித்து சருமத்தை மிருதுவாக்கும்
- முகத்தில் தொடர்ந்து பூசுவதன் மூலம் இளம் வயதில் உண்டாகும் தோல் சுருக்கம் மறைந்து அழகு கூடும்.
- அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், முகத்தில் பூசி வந்தால் கருமை, கரும் புள்ளி ஏற்படாமல் காக்கும்.
- அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
- தினமும் எடுத்துக்கொண்டால் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் ஸ்லிம் ஆகும்.
- தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
மணத்தக்காளி
மணத்தக்காளி
மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு.
மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால்,
- இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும்.
- வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்.
- சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.
- சிறுநீரைப் பெருக்கும்.
- உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
- வாய்ப்புண்களைக் குணமாக்கும்.
மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம்
அத்திப்பட்டை- அத்திப்பழம்
அத்திப்பட்டை
- உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்கிறது.
- சுறுசுறுப்பைத்தருகிறது. , கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்குகிறது.,
- ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.
- வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது.
- கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது.
- வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
- சிறுநீர்ப்பைப் புண்,
- சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல்,
- ஆஸ்துமா,
- வலிப்பு நோய்,
- உடல் உளைச்சல்,
- சோர்வு,
- அசதி,
- இளைப்பு
- போன்றவற்றை நீக்கவும் மிகச் சிறந்த பலன் தருகிறது
தூதுவளை
தூதுவளை
சுக்குட்டிக் கீரை
சுக்குட்டிக் கீரை
பிரண்டை
பிரண்டை
- குடல்புழுக்களை அழிக்கிறது,
- பசியைத் தூண்டுகிறது.
- வயிற்று உபாதைகளுக்கு எதிராக செயல்படுகிறது.
- தோல் நோய்கள், தொழுநோய், இரத்தப்போக்கு, கால் கை வலிப்பு, வலிப்பு நோய், நாள்பட்ட புண்கள், வீக்கம். ஆகியவற்றிற்கும் அருமருந்து.
- உடல் எடை வயிற்றைக் குறைக்க உதவுகிறது.
- பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.
- பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.
- அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.
- மாதவிடாய் நின்றதும் பெண்கள் எலும்புகள் அரித்து துளைகளாக மாறி எலும்பு எளிதில் முறிந்து விடும். பிரண்டையை பயன்படுத்தினால் எலும்புகள் வலுவாகும்
-
- பிரண்டைச்சாறு பல் ஈறுகளில் இரத்தம் கசியும் ஸ்கர்வி நோயை குணப்படுத்துகிறது. பிரண்டைச்சாறு ஆஸ்மாவுக்கு மருந்தாக பயன்படுகிறது
- கால்நடைகளுக்கு தீவனத்துடன் பிரண்டையை தருவதால் பால் சுரப்பு அதிகமாகிறது
-
வசம்பு
வசம்பு
- திருநீற்றுப் பச்சிலை இலைச் சாற்றுடன் வசம்பைச் சேர்த்தரைத்து, முகப்பருக்களின் மீது தடவி வர, பவுர்ணமி சந்திரனாய் முகம் பிரகாசிக்கும்.
- காய்ந்த வசம்பை பொடி பண்ணி அதிலிருந்து 1/2 ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து கொதிக்கவிட்டு, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் பசியின்மையோ, சிறு சிறு தொற்று நோய்களோ வராது. 6 மாதத்திற்குட்பட்ட வயதுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு சிட்டிகை வசம்பு பொடி போதுமானது.
- தொற்று நோய் அண்டாமல் இருக்க வசம்பை சிறிய மணி அளவில் பொடிதாக நறுக்கி நூலில் கோர்த்து (தேவைப்பட்டால் அழகுக்கு இடையிடையே கறுப்பு, வெள்ளை மணிகள் கோர்த்து) பிள்ளையின் கைகளில் வளையமாக கட்டிவைப்பார்கள்.
- வசம்பை தூள் செய்து 2 ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது ஜீரணம் கொடுக்கக் கூடியதாகவும் பலவித தொற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்தாகவும் அமையும்.
- வயிற்றுவலியால் தொடர்ந்து கஷ்டப்படும் குழந்தைகளுக்கு வசம்பை தீயில் சுட்டு மருந்து உரைக்கும் கல்லில் வைத்து தேய்த்து பவுடராக்கி, 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் குழைத்து, குழந்தையின் தொப்புளை சுற்றி பற்று போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
- விஷத்தன்மை கலந்துவிட்ட உணவை யாரும் சாப்பிட்டுவிட்டாலோ அல்லது விஷத்தையே சாப்பிட்டிருந்தாலும் 2 அல்லது 3 டீஸ்பூன் பொடியாக்கிய வசம்பை தண்ணீரில் கரைத்து உடனே கொடுத்தால் விஷம் வெளியே வந்துவிடும் என்று சொல்வார்கள்.
- கால்நடைகளுக்கு தொற்றுநோய் வராமல் தடுக்க வசம்பு தூளுடன் மஞ்சள்தூள் கலந்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.
- மூட்டுவலிகள் இருப்பவர்கள் வசம்பை நீரில் தேய்த்து மூட்டுபகுதிகளில் தடவி வர வலி குறையும். வாதம், கீல்வாதம் போன்றவற்றையும் தீர்க் கும் வசம்பு. விஷ பூச்சிகள் கடித்த இடத்தில் வசம்பு பொடியை நீரில் குழைத்து வைத்தால் விஷங்கள் இறங்கும்.
- இது பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.
பனங்கற்கண்டு
பனங்கற்கண்டு
பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள்.முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும்
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது
மூக்கிரட்டை
மூக்கிரட்டை
- கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.
கீழாநெல்லி
கீழாநெல்லி
- அவகதவாய்,
- இளஞ்சியம்,
- கீழ்க்காய்,
- காதமாதாநிதி,
- கீழ்வாய் நெல்லி,
- காமாலை நிவர்த்தி...
- மாலறுது,
- வித்துவேசரம்,
- மாலினி,
- பெருவிரியகா,
- பூதாத்திரி
- மூத்திர நோய்கள்,
- மஞ்சள் காமாலை,
- குடல்புண்
- தொண்டை நோய்கள்,
- வயிற்றுவலி,
- வயிற்றோட்டம்,
- அதிக உஷ்ணம்,
- கண்நோய்கள்,
- மாதவிடாய்க் கோளாறுகள்,
- பசியின்மை,
- முறைசுரம்,
- தோல் நோய்கள்,
- தீராத அழுகல்
- புண்கள்,
- குருதிவடிதல்,
- புரைகள்,
- வீக்கம்,
- கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.
- கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.
- சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
- கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.
- கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும்.
- கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால் அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
- ஓரிதழ் தாமரையுடன் சம அளவாக கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வாலிப வயோதிகம் நீங்கும்.
- கீழாநெல்லிப் பொடி மஞ்சள் காமாலை, உடலில் உண்டாகும் வெப்பம், உடலில் ஊறிய மேகம், தாதுவெப்பம், நீரிழிவு இவற்றை போக்க உதவும்.
- பல் கூச்சம் இருந்தால் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் போதும். உடனே பல் கூச்சம் போய்விடும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால். ஈறு நோய்கள் குணமாகும்
- கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.
மல்லிகைப் பூ
மல்லிகை
பச்சைக் கற்பூரம்
பச்சைக் கற்பூரம்
- ஓமத்தை இலேசாக வறுத்து, இடித்துத்தூள் செய்து கொள்ள வேண்டும். 5 கிராம் அளவு தூளுடன், சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து, வெள்ளைத் துணியில் வைத்து, பச்சைக் கற்பூரப் பொடியுடன் கலக்குமளவிற்கு நன்றாக நசுக்கி பந்து போலத் துணியில் கட்டி மூக்கால் நுகர சளி ஒழுகுதல், மூக்கடைப்பு ஆகியவை குணமாகும்.
சித்திரமூல வேர்ப்பட்டை
சித்திரமூல வேர்ப்பட்டை
சீரகம்
சீரகம்
- ஓமத்தையும் சீரகத்தையும் வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, தினமும் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
- வாதநாராயணன் இலையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்
- சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
எலுமிச்சை
எலுமிச்சை
- இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
- எலுமிச்சை சாற்றை இரவில் படுக்கும் போது சிறிது நீரில் கலந்து, பருக்களின் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இது பருக்களில் உள்ள பஸ்ஸை நீக்கி அதில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல உதவும்.
கடுகு
கடுகு
துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ பிரச்சனைகள் அகலும்.
மஞ்சள்
மஞ்சள்
- ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசைபோல அரைத்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வீக்கம் கரையும்.
- 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை படுக்கும் முன்பு இறுகக் கட்டி விட செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
- கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
- குப்பைமேனி இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
- மஞ்சள் மற்றும் கடலைமாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவைத் தரும்.
பனங்கல்கண்டு
பனங்கல்கண்டு
ஏலக்காய்
ஏலக்காய்
மருதம்
மருதம்
- ஆவாரை பூ, இலை, வேர், பட்டை, பிசின் அனைத்தையும் ஒன்றாக்கி அதனுடன் நாவல் பட்டை, கொன்றைபட்டை, மருதம், கோஷ்டம் கொண்டு தயாரிக்கப்படும் ஆவாரை நீர் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதோடு நீரிழிவால் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துகிறது.
கொன்றைபட்டை
கொன்றைபட்டை
- ஆவாரை பூ, இலை, வேர், பட்டை, பிசின் அனைத்தையும் ஒன்றாக்கி அதனுடன் நாவல் பட்டை, கொன்றைபட்டை, மருதம், கோஷ்டம் கொண்டு தயாரிக்கப்படும் ஆவாரை நீர் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதோடு நீரிழிவால் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துகிறது.
நாவல்
நாவல்
- ஆவாரை பூ, இலை, வேர், பட்டை, பிசின் அனைத்தையும் ஒன்றாக்கி அதனுடன் நாவல் பட்டை, கொன்றைபட்டை, மருதம், கோஷ்டம் கொண்டு தயாரிக்கப்படும் ஆவாரை நீர் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதோடு நீரிழிவால் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துகிறது.
- கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.
ஓமம்
ஓமம்
- இந்தியாவில் மலைப் பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள செடி வகையைச் சார்ந்த தாவரம். விதைகள் ஓமம் எனப்படுகின்றன.
- இவையே மருத்துவத்தில் பயன்படுபவை. கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபிளோவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.
- நாட்டு மருந்து கடைகளிலும் மளிகைக் கடைகளிலும் ஓமம் கிடைக்கும்.
- ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.
மாற்றுப் பெயர்
- அசமோதம்
- திப்பியம்
- கார்சவை
- ஓமம்,மிளகு,வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை,மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு, வேளைக்கு 1/2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிக்கழிச்சல் ஆகியவை தீரும்.
- ஓமத்தைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பசைபோலச் செய்து, வயிற்றின்மீது பற்றுப் போட வயிற்றுவலி குணமாகும்.
- ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசைபோல அரைத்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வீக்கம் கரையும்.
- காய்ச்சல் காலங்களில் கண்டங்கத்திரி வேருடன் சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவிட்டு சுண்டக்காய்ச்சி அந்த நீரை வெந்நீருக்கு மாற்றாக குடித்துவந்தால் கபத்தால் உண்டான நோய் விரைவில் குணமாகும்.
- ஓமத்தை இலேசாக வறுத்து, இடித்துத்தூள் செய்து கொள்ள வேண்டும். 5 கிராம் அளவு தூளுடன், சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து, வெள்ளைத் துணியில் வைத்து, பச்சைக் கற்பூரப் பொடியுடன் கலக்குமளவிற்கு நன்றாக நசுக்கி பந்து போலத் துணியில் கட்டி மூக்கால் நுகர சளி ஒழுகுதல், மூக்கடைப்பு ஆகியவை குணமாகும்.
- ஓமம், சுக்கு, கடுக்காய்த் தோல் இவற்றைச் சம அளவாக எடுத்து, நன்கு தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, ½ தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வாயு உபாதை குணமாகும்.
- ஓமத்தையும் சீரகத்தையும் வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, தினமும் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
- ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, என மூன்றையும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
- தினமும் தவறாமல் ஓம தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் அண்டாது.
- இமயமலையில் வளர்கின்ற செடி.
- கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை.
- உறக்க முண்டாக்கும்;
- நடுக்கத்தைக் குறைக்கும்;
- சுவாச காசத்தைக் குணமாக்கும்;
- நுரையீரல் அழற்சியைப் போக்கும்.
- சூதகவாயு, சூதகவலி போன்றவற்றுக்கும் உள்ளுக்குள் கொடுக்கலாம்.
- சிறுநீர்த்தாரையைப் பலப்படுத்தும்,
- சாதாரண ஓமத்தைவிட அதிகமான காரச்சுவை கொண்டது.
- செரியாமல் மலம் கழிவது, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, வறட்டு இருமல், இரைப்பிருமல், இவைகளைக் குணமாக்கும்.
- சிறுநீரைப் பிரிக்கும்;
- சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்;
- பசியைத் தூண்டும்;
- கல்லீரல், மண்ணீரலை உறுதியாக்கும்.
மிளகு
மிளகு
- ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.
- ஓமம்,மிளகு,வெல்லம் இவை ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து நன்றாக இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை,மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு, வேளைக்கு 1/2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிக்கழிச்சல் ஆகியவை தீரும்.
- அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும். இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை குணமாக்குகிறது.
மூலிகை மருத்துவம்!
மூலிகை மருத்துவம்!
சர்க்கரை நோயா? ஆவாரை சாப்பிடுங்க!
ஆவாரம் பூ
- ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவக் குணங்களை கொண்டவை. சில தாவரங்களின் பூக்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றன. “ஆவாரம் பூ” அப்படிபட்ட மருத்துவ குணம் நிறைந்த ஒரு பூ வகை ஆகும். “ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” எனும் பழமொழி ஆவாரம் பூவின் மருத்துவ குண மகிமையை கூறுகிறது.
- நீரிழிவுக்கு சித்தமருத்துவத்தில் மருந்தாக தருவது ஆவாரை தான். இதை நவீன ஆய்வுகளும் ஒப்புகொண்டு. ஆவாரையில் ஆன்டிகிளைசெமிக் இருப்பதை உறுதி செய்துள்ளன
- ஆவாரை பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து கொண்டு வைத்துகொள்ளவேண்டும். இதை மாதவிடாய்க்கு முன்பு 15 நாட்களில் ஒரு டம்ளர் பாலோடு கால் டீஸ்பூன் கலந்து கொடுத்தால் அதிக இரத்த போக்கு குறையும்.
- மாதவிடாய் நாட்களில் தினமும் இரவு நேரத்தில் ஆவாரை இலையை எடுத்து வயிற்றில் கட்டிகொண்டால் வயிறு வலி நிச்சயம் குறையும்.
- ஆவாரை பூ, இலை, வேர், பட்டை, பிசின் அனைத்தையும் ஒன்றாக்கி அதனுடன் நாவல் பட்டை, கொன்றைபட்டை, மருதம், கோஷ்டம் கொண்டு தயாரிக்கப்படும் ஆவாரை நீர் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதோடு நீரிழிவால் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துகிறது.
- கைப்பிடி அளவு ஆவாரம் பூவை எடுத்து இரண்டு டம்ளர் நீரிலிட்டு கொதிக்க வைத்து இனிப்புக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். வாரத்துக்கு மூன்று நாள் இதை குடித்துவந்தால் சிறுநீர்கடுப்பும் எரிச்சலும் விரைவில் மறையும்.
- ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும். அதோடு சொறி, அரிப்பு போன்றவற்றையும் நீக்கும்.
- ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.
- ஆவாரம் பூக்களை நன்கு அரைத்து, அதன் சாற்றின் சில துளிகளை அவ்வப்போது கண்களில் விட்டு வந்தால் கண்ணில் இருக்கும் கிருமிகள் அழிந்து, மெட்ராஸ் ஐ எனப்படும் கண் சம்பந்தமான வியாதி மறையும், கண்கள் மீண்டும் பழைய நிலையை விரைவில் அடையும்.
- ஆவாரம் பூ தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
- ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும்.
- ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும்.
சுக்கு
சுக்கு
- காய்ச்சல் காலங்களில் கண்டங்கத்திரி வேருடன் சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவிட்டு சுண்டக்காய்ச்சி அந்த நீரை வெந்நீருக்கு மாற்றாக குடித்துவந்தால் கபத்தால் உண்டான நோய் விரைவில் குணமாகும்.
- கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை தேக்கரண்டி வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
கண்டங்கத்திரி
கண்டங்கத்திரி
கண்டங்கத்திரியின் இலை, பூ, காய், பழம், பட்டை, வேர், விதை வரை அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு முன்பு செடியை முழுவதையும் வேரோடு எடுத்து முதலில் முள் நீக்க வேண்டும். பிறகு அதை உலர்த்தி தூள் செய்துகொள்ள வேண்டும்.
- சளி, சுவாச நோய்கள் வரும் போது ஒரு டீஸ்பூன் அளவு கண்டங்கத்திரி தூளை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வேகமாக குறையும்.
- ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் கண்டங்கத்திரி தூளை உள்ளுக்கு எடுத்துவந்தால் பலன் கிடைக்கும்.
- கண்டங்கத்திரி இலைகளை பொடியாக்கி நல்லெண்ணெய்யில் குழைத்து மார்பில் தடவினால் வாத நோய் குணமாகும்.
- உடலில் பலவிதமான நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
- சைனஸ்பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கண்டங்கத்திரி பழத்தை நறுக்கி, துளசி இலை, கருப்பு வெற்றிலை போன்றவற்றை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி அந்த எண்ணெயை கொண்டு தலையில் தேய்த்துவந்தால் சைனஸ் குறையும்.
- பழங்களை பறித்து வெயிலில் உலர்த்தி வற்றலாக்கி மருந்து குழம்பில் பயன்படுத்தும் போது, கண்டங்கத்திரி பழம் நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நுரையீரல் புற்று செல்களுக்கு எதிராக வீரியமாக செயல்படகூடியது. வயிறு மற்றும் குடல் சார்ந்த இயக்கங்கள் அனைத்திலும் கிருமித்தொற்று ஏற்படாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
- வளரும் குழந்தை இளைப்பு, இருமல் பிரச்சனைக்கு உட்பட்டால் இந்த பழத்தை உலர்த்தி அதன் பொடியை தேனில் கலந்து காலை, இரவு இரண்டு வேளையும் கொடுக்கலாம் இதனால் நாட்பட்ட இளைப்பு பிரச்சனை குறையும்.
- பசியின்மை பிரச்சனையால் அவதிப்படும் போது இந்த கண்டங்கத்திரி பழ வற்றலை பொடியாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவ வேண்டும். மூன்று நாள்கள் தொடர்ந்து செய்து வந்தாலே சாப்பிட தொடங்குவார்கள்.
- காய்ச்சல் காலங்களில் கண்டங்கத்திரி வேருடன் சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவிட்டு சுண்டக்காய்ச்சி அந்த நீரை வெந்நீருக்கு மாற்றாக குடித்துவந்தால் கபத்தால் உண்டான நோய் விரைவில் குணமாகும்.
- உடலில் வெண்புள்ளி, வெண் குஷ்டம் என்று சொல்லகூடிய பிரச்சனைக்கு கண்டங்கத்திரி இலையை நல்லென்ணெய் சேர்த்து காய்ச்சி தடவி வந்தால் அவை மறைய கூடும். கண்டங்கத்திரி பழத்தை மண் சட்டியில் வேகவைத்து, அவை வெந்ததும் நல்லெண்னெய் சேர்த்து குழைத்து மெழுகு பதம் வரும்போது இறக்கி ஆறியதும் வடிகட்டி வைக்கவும் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் பலன் கூடுதலாக கிடைக்கும். அதே போன்று பாத வெடிப்புக்கும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
கண்டங்கத்திரி நோய் எதிர்ப்பு சக்தி அதிக கொண்டதால் சாப்பிட்டதும் தொண்டையில் தொடங்கி வயிறு முழுவதும் மருத்துவ சிகிச்சை வேலைகளை துவங்கிவிடுமாம். எனவேதான் தொண்டையில் துவங்கும் கொரோனாவையும் அங்கிருந்தே அழிக்கும் என்கின்றார் இயற்கை மருத்துவர். எனினும், இது தொடர்பாக நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் எதுவும் இல்லை.
தேன்
தேன்
- குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும்
- துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்
- கைப்பிடி அளவு ஆவாரம் பூவை எடுத்து இரண்டு டம்ளர் நீரிலிட்டு கொதிக்க வைத்து இனிப்புக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். வாரத்துக்கு மூன்று நாள் இதை குடித்துவந்தால் சிறுநீர்கடுப்பும் எரிச்சலும் விரைவில் மறையும்.
- இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும். அதுவும் இதை காலையில் குடித்தால் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.
- கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால் அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- தேன் மற்றும் ஏலக்காய் பொடியை வெந்நீரில் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.
நீரிழிவு
கற்பூரம்
கற்பூரம்
துளசி
துளசி
துளசி ஒரு மூலிகை செடியாகும்.
(Ocimum tenuiflorum)
இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது.
வேறு பெயர்கள்
ராமதுளசி
துழாய் (நீல நிற துளசி)
துளவம்
மாலலங்கல்
தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.
வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கமும் உண்டு.
ஆடாதோடை
ஆடாதோடை
வேறு பெயர்கள்:
ஆடாதொடை
வாசை
இதன் இலைகள் மிகவும் கசப்புத்தன்மை கொண்டவை. எனவே, ஆடு மாடுகள் இதனை உண்ணாது. ஆடு தொடாத இலை என்பதனால் ஆடு தொடா இலை என்பது மருவி ஆடாதோடை இலை என்று ஆயிற்று.
"ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்" எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது.
ஆடாதோடை மூலிகையின் அரிய பயன்கள்!!
- ஆடாதோடை குடிநீர் தயாரித்து அருந்தி வர தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கி விடும்
- ஆடாதோடை இலைகளை பொடியாக்கி, நீரில் கலந்து பருகிவர, சளித்தொல்லைகள் காரணமான தசை வலிகள் யாவும் விலகிவிடும்.
- ஆடாதோடை இலைகளை நன்கு அலசி, நீரில் காய்ச்சி,மூன்றில் ஒரு பங்காக நீர் சுடும்வரை வைத்திருந்து, பின்னர் தேனுடன் கலந்து பருகிவர, ஜுரம், சளி, இருமல், உடல்வலி மற்றும் ஆஸ்துமா பாதிப்புகளை நீக்கும்.
- முறையாக நாற்பத்தெட்டு நாட்கள் பருகிவர, கொடிய பாதிப்புகள் தரும் T.B என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அந்த காச வியாதி-எலும்புருக்கி வியாதி விலகிவிடும்.
- ஆடாதோடை இலைச்சாற்றை தேனுடன் கலந்து பருகிவர,இரத்த கொதிப்பு, மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் விலகிவிடும்.
- ஆடாதோடை இலைகளை காயவைத்து சுருட்டி, புகைத்துவர, சுவாச இரைப்பு வியாதிகள் விலகும். அல்லது ஆடாதோடை இலைபொடியை, ஊமத்தை இலையில் இட்டு சுருட்டி புகை பிடித்துவர, மூச்சுத்திணறல் பாதிப்புகள் அகலும்.
Popular Posts
-
நவராத்திரி நான்காம் நாள் - Navratri-2022 Fourth Day நவராத்திரி நாள் 4 : அலங்காரம் : மலர்கள் : ராகம் : அம்பிகைக்கு உரிய நிறம்: அடர் ம...
-
நவராத்திரி மூன்றாம் நாள் - Navratri-2022 Third Day நவராத்திரி நாள் 3 : அலங்காரம் : மலர்கள் : ராகம் : அம்பிகைக்கு உரிய நிறம்: அடர் நீ...
-
Happy New Year 2023
-
நவராத்திரி - நாள் 2 நாள் 2 : அலங்காரம் : மலர்கள் : ராகம் : அம்பிகைக்கு உரிய நிறம்: சிவப்பு - சிவப்பு நிறம் ஆற்றலை குறிக்கிறது, அம்மனுக...
-
சீயக்காய் சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும். சீகைக்க...