கழற்சிவிதை
இந்த கழற்சிக்காயை தென்மாவட்டங்களில் தெலுக்காய் என்றும் அழைப்பர்.
- புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும்.
- கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும்.
- கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும்.
- கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும்
- ஆண்கள் உடல்நலம்: விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி, வடிகட்டப்பட்ட தைலத்தை வீக்கம் ஏற்பட்டுள்ள விரைகள் மீது மேல்பூச்சு மருந்தாக தடவி வந்தால் விரைவீக்கம் நீங்கும்.
Emoticon Emoticon