பூனைக்காலி
பூனைக்காலி விதை என்பது வெப்பமயமான மண்டலங்களில் வளரக்கூடியது. இதன் பூவானது காய்த்து ஒவ்வொரு காயிலும் 7 விதைகள் இருக்கும். காய்களின் மேல் மென்மையான மெத்தென்ற சுனை இருக்கும். அதனாலே இது வெல்வெட் பீன் என்றழைக்கப்படுகிறது.
இவை மென்மையாக இருந்தாலும் உடலில் பட்டால் இவை நமைச்சலை உண்டாக்கும்.
நரம்புத்தளர்ச்சி பொடி தயாரிக்கும் முறை
பூனைக்காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கிரான் கிழங்கு போன்றவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து, பொடியாக்கி கொள்ளவும். தினமும் அரை டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து தொடர்ந்து 21 நாட்கள் வரை இதை எடுத்துகொள்ள வேண்டும். சிலருக்கு நரம்புத் தளர்ச்சியால் கைகால் நடுக்கமாக இருக்கும். இவர்கள் 21 நாட்கள் வரை நரம்புத்தளர்ச்சி பொடி பயன்படுத்தினால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
ஆண்மை பெருக்கும்
பூனைக்காலி விதை, சிறு நெருஞ்சில் விதை,தண்ணீர் விட்டான் கிழங்கு,நெல்லி அனைத்தையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் சீந்தில் பொடி, நாட்டுச்சர்க்கரை கலந்து தேனில் குழைத்து காலை மாலை என இரண்டு வேளையும் பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும். விந்து நீர்த்து போவது குறையும். தாது விருத்தியை அதிகரிக்கும். இவை நரம்புகளை வலுவாக்கி ஆண்மை பாதிப்பை சரிசெய்யகூடியது.
பூனைக்காலி விதை உருண்டை
பூனைக்காலி விதையை மருந்தாக எடுக்காமல் ஸ்நாக்ஸ் உருண்டையாக எடுத்துகொள்ளலாம்.
பொட்டுக்கடலை - 250 கிராம்
பூனைக்காலை விதை- 50 கிராம்
கேழ்வரகு மாவு -ஒரு தேக்கரண்டி,
பனைவெல்லம் - இனிப்புக்கேற்ப,
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி,
நெய் - தேவைக்கேற்ப,
உலர் பருப்புகள் - தேவையெனில்
செய்முறை
வாணலியில் பூனைக்காலி விதை சேர்த்து வறுத்து அதனுடன் பொட்டுக்கடலை, கேழ்வரகு அனைத்தையும் சேர்த்து வறுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும். வெல்லத்தைப் பொடித்து வைக்கவும்.
நெய் விட்டு உலர் பருப்புகளை ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் பொடித்த வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து நெய் விட்டு உருண்டையாக்கி பிடிக்கவும். சத்தான சுவையான உருண்டை தயார்.
இதை பூப்படைந்த பெண்களும் வயது வந்த ஆண்களும் குடித்து வந்தால் போதும். நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.
குறிப்பு மருத்துவ ரீதியில் தொடர்ந்து சுயமாக நீங்களாகவே இதை எடுத்துகொள்ள கூடாது. சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துகொள்ள வேண்டும்.
Emoticon Emoticon