திப்பிலி
- காய்ச்சல் காலங்களில் கண்டங்கத்திரி வேருடன் சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவிட்டு சுண்டக்காய்ச்சி அந்த நீரை வெந்நீருக்கு மாற்றாக குடித்துவந்தால் கபத்தால் உண்டான நோய் விரைவில் குணமாகும்.
- கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை தேக்கரண்டி வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
- அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும். இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை குணமாக்குகிறது.
Emoticon Emoticon