நெல்லிக் கனி-நெல்லிக்காய்
நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால்
- உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும்,
- எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
- புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும்.
- உடல் சூட்டைத் தணிக்கும்.
- கண் புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவற்றையும் தடுக்கும்.
- கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
- இதய தசைகளை வலிமையாக்கி, அதிகளவிலான இரத்தத்தை உடல் முழுவதும் அழுத்த உதவி, பல இதய நோய்கள் வராமல் தடுக்கும்..
- வாய் துர்நாற்றத்தைத் தடுத்து, பற்களை வலிமையடையச் செய்யும்.
- இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
- மூட்டுகளில் உள்ள அழற்சி மற்றும் வீக்கம் குறைந்து ஆர்த்ரிடிஸ் பிரச்சனை குறையும்.
நீரிழிவு
தினமும் நெல்லிக்காய் ஜூஸில் தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய் ஜூஸ் உடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
நெல்லிக்காவை சிறிது சிறிதாக கீறி விதையை நீக்கிவிட்டு காய வைத்து, பொடியாக்கி சூரணமாக்கி, பாதி அளவு அபிரேக செந்தூரம் சேர்க்க வேண்டும். அதன் பின்பு இந்த சூரணத்தில் 3 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து 40 நாட்கள் உண்டு வந்தால் உடல் வலிமை பெறும். முகம் மற்றும் தோல்கள் பிரகாசம் அடையும்.
கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால் அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Emoticon Emoticon